×

ஹைட்ரோ கார்பன் திட்டம் யாருடைய ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; எடப்பாடிக்கு அமைச்சர் பதில்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய டெல்டா பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகளின் எதிர்ப்பினை அன்றைக்கே தெரிவித்திருந்தார்கள். மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தோம். நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பு இல்லாமல் விவசாயிகளுடைய குரலுக்கு செவி சாய்க்கும் அரசாக இருந்தது. மக்களுக்கு பாதிப்பு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது? தன்னை ஒரு விவசாயி என ஊர் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க கூடியவரின் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பிலிருந்த காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. தான் மீது வந்திருக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு, தான் தவறு செய்தவர் பிறரை நம்ப மாட்டார் என்ற அடிப்படையில், எல்லா தவறுகளையும் தாங்கள் செய்து விட்டு அதை மூடி மறைக்கக்கூடிய வகையில் திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post ஹைட்ரோ கார்பன் திட்டம் யாருடைய ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது? நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; எடப்பாடிக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Edapadi ,Chennai ,Minister ,Chief Secretariat ,Gold South India ,Thanjai district ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...